மாஸ்டர் சாந்தனுவின் மாஸான சாதனை! நடிகை வெளியிட்ட பதிவு – பலரையும் கவர்ந்த ஸ்பெஷல்

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் சாந்தனு. இவர் விஜய்யின் ரசிகர் என்பது பலரும் அறிந்ததே. நீண்ட காலமாக நல்ல ஹிட் கொடுக்க போராடும் சாந்தனுவுக்கு இப்படம் மீது நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய படம் கொரோனாவால் தள்ளிப்போனது சோதனையான ஒன்றே. இருந்தாலும் ஷாந்தனு தன் நம்பிக்கையை விடவில்லை என்பதை அவரின் பதிவுகளே சொல்கின்றன.

தற்போது ஊரடங்கு காலத்தில் பாடல்கள் ஆல்பம் எடுத்து வெளியிட்டு வரும் அவர் முருங்கைகாய் சிப்ஸ் என்ற படத்தின் ஏதோ சொல்ல பாடலை வெளியிட்டார். இதில் அவருடன் அதுல்யா ரவியும் நடித்திருந்தார்.

சித்ஸ்ரீராம் இப்பாடலை பாட தரண் இசைமைக்க லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் தயாரித்துள்ளார். இப்பாடல் 1 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

https://twitter.com/AthulyaOfficial/status/1296463064901001217